விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கலில் உள்ள ஒரு தோட்டத்தின் அருகில் காலி இடத்தில் ஆண் எலும்புக்கூடு கிடப்பதாக அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து திருத்தங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று எலும்புகளை சேகரித்து விசாரணை நடத்தினர். இது ஆணின் எலும்புக்கூடு என தெரியவந்துள்ளது. எலும்புக்கூடு யாருடையது என தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.