சிவகாசி அருகே மனைவியுடன் தகறாறு; கணவன் தீக்குளித்து தற்கொலை

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே சித்தமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மாரீஸ்வரன் (32) என்பவர், மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். குடித்துவிட்டு அடிக்கடி மனைவியுடன் சண்டையிட்டதால், அவரது மனைவி ஐஸ்வர்யா குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாரீஸ்வரன் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்ததில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி