சிவகாசி: அஜித்குமாருக்கு திமுக கொடுமை செய்துள்ளது - கேடிஆர்

சிவகாசியில் நடைபெற்ற அதிமுக வழக்கறிஞர் பிரிவு ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, திமுக ஆட்சி இந்த தேர்தலோடு முடிந்துவிடும் என்று கூறினார். மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கில், சிபிஐ விசாரணைக்கு பின்னரே உண்மை தெரிய வந்துள்ளது என்றும், செய்யாத தவறுக்கு அஜித்குமார் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் கூறினார். மேலும், திமுக அரசு பொய் வழக்குகளை ஜோடிப்பது அன்றாட நடைமுறையாகிவிட்டது என்றும் குற்றம் சாட்டினார்.

தொடர்புடைய செய்தி