விருதுநகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சட்டமன்றத் தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. மாநில பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கிய இக்கூட்டத்தில், நிர்வாகிகள் பாலகிருஷ்ணசாமி, சிவகுருநாதன், சீனிவாசன் ஆகியோர் ஆலோசனைகளை வழங்கினர். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகாசி எம்எல்ஏ அசோகன், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் சிறப்பாக பணியாற்றவும், ஒரு வாக்காளரின் வாக்கைக்கூட தவறவிடாமல் உறுதி செய்யவும் தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார். கூட்டத்தில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஸ்ரீ ராஜா சொக்கர், செய்தி தொடர்பாளர் மீனாட்சி சுந்தரம், மாநில பொதுக்குழு வெயிலுமுத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.