சாத்தூர்: பட்டாசு ஆலை வெடிவிபத்து 6 நபர்கள் பலி

சாத்தூர் அருகே பொம்மையாபுரம் கிராமத்தில் சாய்நாத் ஃபயர் வொர்க்ஸ் பட்டாசு ஆலையில் வெடி விபத்து நிகழ்ந்தது. தொழிலாளர்கள் உட்பட 6 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல் உள்ளது. 

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பொம்மையாபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் (சாய்நாத் ஃபயர் வொர்க்ஸ்) பட்டாசு ஆலையில் காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் பட்டாசு தயாரிக்க மருந்து கலவை தயாரிக்கும் போது உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் 4 அறைகள் தரைமட்டமாயின. இந்த விபத்தில் 4 ஆண் தொழிலாளர்கள் உட்பட 6 பேர் பலியானார்கள். 

விபத்து குறித்த தகவல் அறிந்து சாத்தூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையம் வாகனங்கள் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. விபத்து குறித்து வச்சகாரப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி