சாத்தூர் அருகே வாலிபர் தற்கொலை;போலீஸார் விசாரணை....

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் அடையாளம் தெரியாத 35 வயது மதிக்கத்தக்க நபர் எலும்பு மட்டும் தெரிந்த நிலையில் தரையில் உட்கார்ந்த நிலையில் தூக்கிட்டு இறந்து கிடந்தார். இது குறித்து சிவகாசி விஏஓ செல்லச்சாமி புகார் அளித்தார். விசாரணையில், இவர் விருதுநகர் வடமலை குறிச்சி சின்ன மூப்பன்பட்டியை சேர்ந்த முருகன் (37) என்பதும், ஒரு மாதத்திற்கு முன்பே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி