சாத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025-ம் ஆண்டிற்கான ஓராண்டு / இரண்டாண்டு தொழிற் பிரிவுகளில் சேர 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அரசு தொழிற்பயிற்சி நிலையம் சாத்தூர் நிலையத்திற்கு நேரில் வந்து பயிற்சியில் சேர தெரிவிக்கப்படுகிறது. இப்பயிற்சியில் இருபாலரும் (ஆண் / பெண்) 31.07.2025 முடிய விண்ணப்பம் செய்யலாம். பயிற்சிக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேல் பயின்றவர்கள் அனைவரும் தகுதியானவர்கள். ஏற்கனவே B.Sc., Diploma, B.E., கல்வியில் சேர்ந்து கல்வியினை தொடர இயலாதவர்களும் திருமணமானவர்களும் விண்ணப்பிக்கலாம்.