சாத்தூர்: கிராம நிர்வாக அலுவலர்கள் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விருதுநகர், சாத்தூர், வெம்பக்கோட்டை உள்ளிட்ட தாலுகாக்களை சேர்ந்த கிராம அலுவலர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் தமிழக அரசின் அரசு ஊழியர் விரோத போக்கை கண்டித்தும் பணி புறக்கணிப்பு செய்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

விருதுநகர் மாவட்டம் குமாரலிங்கபுரம் சிப்காட் பணிக்காக சாலை அமைக்கும் பணியின் போது அங்குள்ள கண்மாயில் மண் அள்ளியதில் முறைகேடு ஏற்பட்டதாக கூறி சாத்தூர் வட்டாட்சியர் ராமநாதன் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் நீர் மேலாண்மை துறை அலுவலர்கள் உள்ளிட்ட ஏழு பேரை மாவட்ட நிர்வாகம் பணியை சரியாக கவனிக்கவில்லை என தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்திருந்தது. வட்டாட்சியர் மற்றும் அரசு அலுவலர்கள் 7 பேரை பணியிடை நீக்கம் செய்த மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் பணியிடை உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி கண்டன ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி