சாத்தூர் அருகே ஒத்தையாலை பகுதியைச் சேர்ந்த நவந்தன் (52) என்பவர், பந்துவார்பட்டி அருகே தனியாருக்குச் சொந்தமான இடத்தில் தகர ஷெட் அமைத்து, அனுமதியின்றி பட்டாசு திரி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். கிராம நிர்வாக அலுவலர் சண்முகராஜ் மற்றும் அலுவலர்கள் நடத்திய சோதனையில் இது தெரியவந்தது. புகாரின் பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, பட்டாசு மற்றும் திரிகளைப் பறிமுதல் செய்தனர்.