தனது வீட்டிற்கு முன்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த தனது இருசக்கர வாகனம் மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார். வாகனம் திருடப்பட்ட சம்பவம் குறித்து சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் பரசுராமன் புகார் அளித்த நிலையில் போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். பல்வேறு இடங்களில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டதாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இருசக்கர வாகனங்களை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
பரசுராமனின் இருசக்கர வாகனத்தை திருடியதாக மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் மற்றும் ஆனந்தராமன் மற்றும் ஒரு சிறுவன் உள்பட 3 பேரை சாத்தூர் நகர் போலீசார் கைது செய்து இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மது அருந்த பணம் இல்லாததால் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்தனர்.