விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாத்தூர் கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் கன்னியாகுமரியைச் சேர்ந்த அஷ்ரப் என்பவர் இருசக்கர வாகனத்தில் தனது நண்பருடன் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தவறிவிழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அஷ்ரப் உயிரிழந்த நிலையில், இந்த விபத்து குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி அஷ்ரபின் உறவினர் அளித்த புகாரின் அடிப்படையில் சாத்தூர் தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.