அதைத்தொடர்ந்து அவர்கள் விருதுநகர் ஊடக காவல் நிலையம் அழைத்துவரப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இது குறித்த தகவல் அறிந்த பாஜகவினர் அங்கு கூடினர். அப்பொழுது விசாரணைக்காக அழைத்து வரப்பட்டிருந்த சந்திரா என்ற முதியவர் ஊரக காவல் நிலையத்தில் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அங்கு இருந்த பாஜகவினர் 108 ஆம்புலன்ஸ் வரவழைத்தனர். அந்த ஆம்புலன்ஸில் சந்திராவை மருத்துவமனைக்கு அனுப்பாமல் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டனர்.
108 ஆம்புலன்ஸ் திருப்பி அனுப்பப்பட்டது. இதன் காரணமாக பாஜகவினருக்கும் அங்கிருந்த காவல்துறைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து காவல் நிலையம் பூட்டப்பட்டு அங்கிருந்த பாஜகவினர் வெளியேற்றப்பட்டனர். இதன் காரணமாக அங்கு பதற்றம் தொடர்ந்து நிலவியது.