விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட தாயில்பட்டி அருகே கோட்டையூரில் மாரியப்பன் என்பவரின் வீட்டு மாடியில் மர்ம நபர் பதுங்கி இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அங்கு வந்த வெம்பக்கோட்டை காவல் நிலைய போலீசார், மொட்டை மாடியில் பதுங்கி இருந்த அசோக் என்பவரைக் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் நகை திருடுவதற்காக அங்கு பதுங்கி இருந்தது தெரியவந்தது.