விருதுநகர்: வாயில் கருப்புத் துணி கட்டி கண்டன ஆர்ப்பாட்டம்

விருதுநகர் போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் நுழைவு வாயில் முன்பாக போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் டி.ஏ உயர்வு, 21 மாத பணப்பலன்கள், பழைய பென்ஷன் திட்டம், மருத்துவ காப்பீடு உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆளும் திமுக அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களையும் முழக்கங்களையும் எழுப்பியும் வாயில் கருப்புத் துணி கட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 விருதுநகர் மாவட்ட போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தின் நுழைவு வாயில் முன் அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற மண்டல தலைவர் வேலுச்சாமி தலைமையில் நிலுவை டி.ஏ உயர்வு, 21 மாத பணப்பலன்கள், ஓய்வு பெறும் நாளில் பணப்பலன்கள், பழைய பென்ஷன் திட்டம், மருத்துவ காப்பீடு உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் கருப்பு துணி கட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு போக்குவரத்துக் கழக நிர்வாகத்திற்கு எதிராகவும் தமிழக அரசுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களையும் கோஷங்களையும் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் அனைவரும் அமைதியாக கலந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி