இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடியில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயிலில் 13 உண்டியல்கள் திறக்கப்பட்டன. இதில் 10 நிரந்தர உண்டியல்கள், ஒரு நகரும் நிரந்தர உண்டியல், மற்றும் ஒரு கோசாலை உண்டியல் ஆகியவை அடங்கும். இந்த உண்டியல்களில் இருந்து மொத்தம் ரூ. 37,44,983 ரொக்கமும், 69.200 கிராம் பலமாற்று தங்கமும், 425.000 கிராம் பலமாற்று வெள்ளியும் கிடைக்கப்பெற்றது. நிரந்தர உண்டியல்கள் மற்றும் நகரும் நிரந்தர உண்டியல் மூலம் ரூ. 37,04,107-ம், கோசாலை உண்டியல் மூலம் ரூ. 40,876-ம் வசூலானது.

தொடர்புடைய செய்தி