விருதுநகர்: நலத்திட்ட பணிகளை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்த அமைச்சர்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள அப்பாநாயக்கன்பட்டி மற்றும் மல்லைநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பேருந்து நிறுத்தம் மற்றும் நியாயவிலை கடைகள் ஆகியவை கட்டிமுடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு இன்று வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தொடங்கிவைத்தார். 

அப்பாநாயக்கன்பட்டியில் 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பேருந்து நிழற்குடையும், மல்லைநாயக்கன்பட்டியில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்ட நியாயவிலை கடையையும் வருவாய்துறை அமைச்சர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கிவைத்தார். அத்துடன் மல்லைநாயக்கன்பட்டியில் தொடங்கிவைத்த ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு பொருட்களையும் வழங்கினார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களையும் அமைச்சரிடம் வழங்கினர்.

  மனுக்களைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார். இந்நிகழ்ச்சியில் வட்டாரவளர்ச்சி அலுவலர் மற்றும் வருவாய்துறை அலுவலர் மற்றும் அரசு அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி