விருதுநகர்: கிராம செயலக கட்டிடங்களை திறந்து வைத்த நிதி அமைச்சர்

விருதுநகர் நரிக்குடி அருகே சுமார் 1 கோடி செலவில் முடிவற்ற கிராம செயலக கட்டிடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார். 

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே சுமார் 1 கோடியே 16 லட்சம் செலவில் புதியதாக கட்டப்பட்ட கட்டிடங்களை தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். அதன்படி புல்வாய்க்கரை கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 30.10 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், பனைக்குடி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 42.65 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட கிராம செயலக கட்டிடம், இசலி கிராமத்தில் 42.65 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட கிராம செயலக கட்டிடத்தை தமிழ்நாடு நிதி சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைத்தார். 

அப்போது நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கு அப்பகுதி பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி