இந்த நிகழ்ச்சியில் சாத்தூர் மதிமுக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஏ.ஆர்.ஆர். ரகுராமன் மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு குப்பைத் தொட்டிகளை வழங்கினார்கள். மேலும் இந்த நிகழ்ச்சியில் மதிமுக தொண்டர்களிடம் இருந்து பெறப்பட்ட நன்கொடை மற்றும் சட்டமன்ற உறுப்பினரின் சொந்த நிதியில் இருந்து சுமார் 2000க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு 4100க்கும் மேற்பட்ட மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளுக்கென தனித்தனியாக இரண்டு குப்பை தொட்டிகளை சட்டமன்ற உறுப்பினர் பொது மக்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்கினார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் பேசிய மதிமுக சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஏ.ஆர்.ஆர். ரகுராமன் அரசியல் கட்சிகள் பொதுமக்களுக்கு இலவசமாக கொடுக்கும் பொருட்களின் மீது ஸ்டிக்கர் ஒட்டினாலும் மற்ற கட்சிகளை போல் இந்த திட்டத்தை அரசியலுக்காக செய்யாமல் ஊர் சுத்தமாக இருப்பதற்காக குப்பை தொட்டியில் ஸ்டிக்கர் ஒட்டாமல் கொடுத்திருக்கிறோம் என்றார்.