அமைச்சர் எல்.முருகன் மீது விருதுநகர் எம்.பி கடும் விமர்சனம்

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் நேற்று (செப்.,24) இரவு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் எம்பி மாணிக்கதாகூர் பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்கம்தாகூர், நெல்லை காங்கிரஸ் எம்.பி மத்திய இணை அமைச்சர் எல். முருகனை மரியாதை நிமித்தமாக தான் சந்தித்தார். மத்திய இணை அமைச்சர் எல். முருகனால் தமிழ்நாட்டுக்கு எந்த வித பயனும் ஏற்படப்போவதில்லை.

பாஜகவின் எல். முருகன் தமிழ்நாட்டுக்கு எதுவுமே செய்யாத ஒரு மத்திய அமைச்சர் தமிழ்நாட்டிற்கு பிரதிநிதித்துவம் கொடுத்தாக கணக்கு காட்டுவதற்கு தான் எல். முருகன் மத்திய இணை அமைச்சராக இருக்கிறார். திமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நன்றாக இருக்கிறது என காட்டுவதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது . தமிழகத்தில் ரவுடிகள், ரவுடிசம் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதை பொதுமக்கள் பாராட்டுகின்றனர் என்றார்.

தொடர்புடைய செய்தி