சிபிஎம் கட்சியின் தலைமை குழு உறுப்பினர் பாலபாரதி பேச்சு

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை குழு உறுப்பினர் வாசுகி, நூறு நாள் வேலை திட்டத்தில் இருந்த சட்டத்தை மாற்றி பாஜக அரசு அதை செல்லாக் காசாக்கியதாக குற்றம் சாட்டினார். தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, கூட்டணி கட்சிகள் இந்த சட்டத்தை சிறப்பானது என கூறி, பொறாமையால் எதிர்க்கட்சிகள் இதை எதிர்க்கின்றனர் என ஊர் ஊராக கூட்டம் போடுவதாக விமர்சித்தார். 100 நாள் வேலை கிடைக்கவில்லை என அதிமுக கூறுவதையும், சீமான், விஜய் ஆகியோர் 100 நாள் வேலை செய்யும் இடங்களுக்கு சென்றதுண்டா எனவும் கேள்வி எழுப்பினார். மேலும், விஜய் ஆட்சிக்கு வந்தால் சுபிட்சம், பெண்கள் பாதுகாப்பு, தொழிலாளர் வேலைவாய்ப்பு, விவசாயிகள் நலன் என பேசுவது குறித்து, அவரது கோரிக்கைகள் அவருக்கு தெரியுமா என வாசுகி கேள்வி எழுப்பினார்.

தொடர்புடைய செய்தி