சாத்தூர்: சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம்

சாத்தூர் யூனியனுக்கு உட்பட்ட வெங்கடாசலபுரம் மற்றும் சிந்தப்பள்ளி பஞ்சாயத்துக்களில் 2024-25-ம் நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் குறித்த சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி ஒன்றிய மேற்பார்வையாளர் டேவிட் தலைமையில் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் இத்திட்டம் குறித்தும், சமூகதணிக்கையின் நோக்கம் குறித்தும் விளக்கப்பட்டது. சமூக தணிக்கை வட்டார வள அலுவலர்கள் சரவணபெருமாள், கலைச்செல்வி ராஜம்மாள் தலைமையிலான குழுவினர் தணிக்கை மேற்கொண்டனர். இதில் திட்டப்பயனாளிகள், ஊர் பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி