சாத்தூர் அருகே மாமியாரை அரிவாள்மனையால் வெட்டிய மருமகன்

சாத்தூர் அருகே நத்தத்துப்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணவேணி (27) என்பவரின் கணவர் மகேசுவரன், மது அருந்திவிட்டு மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுகுறித்து கிருஷ்ணவேணியின் தாயார் மாரியம்மாள் தட்டிக் கேட்டபோது, ஆத்திரமடைந்த மகேசுவரன் அரிவாளால் மாரியம்மாளின் தலையில் வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மாரியம்மாள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து இருக்கன்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி