சாத்தூர்: தாயுடன் சண்டையிட்ட தந்தையை வெட்டி கொலை செய்த மகன்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கரிசல்பட்டி கிராமத்தில், குடிபோதையில் இருந்த மணிகண்டன் தனது மனைவி மகேஸ்வரியுடன் சண்டையிட்டு அரிவாளால் வெட்டுவதாக மிரட்டியுள்ளார். தாயின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த மகன் சுரேந்தர், தந்தையிடமிருந்து அரிவாளைப் பிடுங்கி அவரை வெட்டியதில் மணிகண்டன் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி