சாத்தூர்: பைக்கிலிருந்து தவறி விழுந்து வாலிபர் பலி

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே குண்டலக்குத்தூரை சேர்ந்தவர் ஈஸ்வரன் (20). கொத்தனார். இவர் கடந்த ஜூன் 13ஆம் தேதியன்று மாலை வழக்கம்போல் வேலை முடித்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது நடுவப்பட்டி-கோல்வார்பட்டி சாலையில் குலசேகரபுரம் விளக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்திலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார். 

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த அப்பயநாயக்கன்பட்டி போலீசார் இவரது உடலை மீட்டு சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து இவரது தந்தை ஹரிராமர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி