சாத்தூர்: விஷம் அருந்தி இளைஞர் தற்கொலை

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே நல்லமுத்தன்பட்டியைச் சேர்ந்த கவுதம் (20) என்ற இளைஞர், பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். சென்னையில் வேலை செய்து வந்த கவுதம், சொந்த ஊருக்கு வந்த பிறகு வேலைக்கு திரும்ப செல்லாததால் பெற்றோர் அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி