சாத்தூர்: விஷம் குடித்து பெண் தற்கொலை

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டூர் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த பேபி (32) என்பவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். தொடர் சிகிச்சையாலும், மன உளைச்சலாலும் பாதிக்கப்பட்ட அவர், வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி