விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகர் போலீசார் ரோந்து பணியின் போது ஆண்டாள்புரம் பகுதியில் ஒரு பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தது கண்டறியப்பட்டது. போலீசார் சோதனை மேற்கொண்டபோது கடையின் உரிமையாளர் தப்பி ஓடிவிட்டார். போலீசார் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, தப்பியோடிய உரிமையாளரை வலைவீசி தேடி வருகின்றனர்.