நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விப்ரோ நிறுவனத்தின் அதிகாரி ராதிகாரவி கலந்து கொண்டு 1296 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது, தற்போதுள்ள சூழ்நிலையில் மாணவ, மாணவிகள் அதிகளவில் திறமைகளைக் கொண்டிருந்தால் மட்டுமே பன்னாட்டு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற முடியும். நேர்காணலின் போது பணி அமர்த்தும் அதிகாரிகள் எதிர்பார்க்கும் திறமைகளை மாணவர், மாணவிகள் பெற்றிருக்க வேண்டும். வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பங்களை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கேற்ப உள்ளங்களை தயார் செய்து கொள்ள வேண்டும். விழாவில் பி.எஸ்.ஆர். கல்விக்குழும முதல்வர்கள் மகேஸ்வரி, ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியர் சுதாகர் நன்றி கூறினார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?