தாம்பரம்-நாகா்கோவில் இடையேயான சிறப்பு ரயில் (எண் 06011) ஜூலை 7 முதல் ஜூலை 14 வரை இயக்கப்படும். அதேபோல தெற்கு மேற்கு ரயில்வே சார்பில் செவ்வாய்க்கிழமை தோறும் இயக்கப்படும் எஸ்எம்விடி பெங்களூரு-நரங்கி இடையேயான சிறப்பு ரயில் (எண் 06559) வரும் ஜூலை 8 மற்றும் ஜூலை 15-ஆம் தேதிக்கு கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, மறுமார்க்கத்தில் நரங்கி-எஸ்எம்விடி பெங்களூரு இடையே சனிக்கிழமை தோறும் இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண் 06560) வரும் ஜூலை 12 மற்றும் ஜூலை 19-ஆம் தேதிக்கு கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.