சாத்தூர்: சிறப்பு ரயில் சேவை மாற்றம்

விருதுநகர் மாவட்டம் கன்னியாகுமரியிலிருந்து தெலங்கானா செல்லும் சிறப்பு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மதுரை கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் ரயில் சேவை மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. கன்னியாகுமரியிலிருந்து வரும் ஜூன் - 20, 27 ஆகிய தேதிகளில் காலை 5.15 மணிக்கு புறப்பட்டு தெலுங்கானா மாநிலம் சார்லப்பள்ளி செல்லும் சிறப்பு ரயில் (07229), மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல் செல்லாமல், சாத்தூர், விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாக சார்லப்பள்ளி செல்லுமென தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதை ரயில் பயணிகள் கவனித்து தங்களது பயணத்திட்டத்தை மாற்றிக்கொள்ளுமாறு தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி