சாத்தூர்: மகாசிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு ரயில்...

மகாசிவராத்திரியை முன்னிட்டு, பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்க, கன்னியாகுமரிக்கும் சென்னைக்கும் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை எழும்பூரிலிருந்து பிப். 13, வெள்ளிக்கிழமை இரவு 11.45 மணிக்கு புறப்பட்ட சிறப்பு ரயில் சனிக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு கன்னியாகுமரியை அடையும். மறுமார்க்கமாக, பிப். 16, திங்கள்கிழமை இரவு 9.35 மணிக்கு கன்னியாகுமரியிலிருந்து புறப்படும் சிறப்பு ரயில் செவ்வாய்க்கிழமை காலை 10.15 மணிக்கு சென்னை வந்தடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி