விருதுநகர்: தாயை தாக்கிய மகன் கைது

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே தாயை தாக்கிய மகன் கைது. சாத்தூர் அடுத்துள்ள நத்தத்துபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் இவரது மனைவி சமுத்திரகனி இவர்கள் இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். இவர்களது மகன் நல்லதம்பி (22), இவர் வேலைக்குச் செல்லாமல் அடிக்கடி மது அருந்திவிட்டு தனது தகராறில் ஈடுபட்டு வந்த நிலையில் பெற்றோர்கள் நல்லதம்பியைக் கண்டித்துள்ளனர். இதில் கோபமடைந்த நல்லதம்பி தனது தாயைக் கடுமையாகத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் காயமடைந்த சமுத்திரகனி சாத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இச்சம்பவம் குறித்து தாயார் சமுத்திரகனி இருக்கன்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் நல்லதம்பியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி