விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே சின்னஓடைப்பட்டி விலக்கு அருகே சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த சாத்தூரைச் சேர்ந்த ஆரோக்கியம் (51) என்ற திருநங்கை மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்தார். அவரை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனையிலும், பின்னர் விருதுநகர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.