159 கி.மீ. தூரம் கொண்ட இவ்வழித்தடத்தில் இரட்டை ரயில்பாதை, மின்மயமாக்கல் பணிகள் முடிந்து முத்துநகர், துாத்துக்குடி-மைசூரு ரயில்கள் இயங்குகிறது. இந்நிலையில் மதுரை- துாத்துக்குடி இடையே அருப்புக்கோட்டை வழியாக ரயில் பாதை அமைக்கும் திட்டம் 2011-12ல் உருவானது. இத்திட்டத்தில் திருப்பரங்குன்றத்தில் பிரிந்து அருப்புக்கோட்டை, மேலமருதூர் வழியாக மீளவிட்டான் வரை 136 கி.மீ.க்கு புதிய ரயில் பாதை அமைய உள்ளது. இதற்காக நிலங்கள் கையகப்படுத்தும் பணி நடந்தன. பின் போதிய நிதி ஒதுக்கப்படாததால், நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் போன்ற காரணங்களால் இந்தப்பணி முடங்கியதால், இத்திட்டம் கைவிடப்படுவதாக சர்ச்சைகள் கிளம்பின. எனவே இத்திட்டம் மீண்டும் துவங்கப்படும் என அனைவரும் எதிர்பார்ப்பில் இருக்கிறது.
மைதானத்தில் ரகளை செய்த மெஸ்ஸி ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி