விருதுநகர் மாவட்டம், சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இந்த நாய்கள் அப்பகுதியில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், மாணவிகளைத் துரத்திச் சென்று கடிக்கின்றன. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றனர். எனவே பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் நாய்களைப் பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.