சாத்துார்: சாலை விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே நடந்த சாலை விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி. தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் அருகே திப்பனூர்த்து கிராமத்தைச் சேர்ந்த முனியராஜ் (வயது 35). இவர் சிவகாசியில் தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார். 

முனியராஜ் சிவகாசியில் இருந்து தனது சொந்த ஊரான திப்பனூர்த்துக்கு மோட்டார் சைக்கிளில் சிவகாசி-சாத்தூர் சாலையில் உள்ள மேட்டமலை அருகே சென்றுகொண்டிருந்தபோது அந்த வழியாக எதிரே வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் முனியராஜ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த சாத்தூர் நகர் போலீசார் உயிரிழந்த முனியராஜ் உடலை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து சாத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் சதீஷ் (40) என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி