சாத்தூர் செட்டுடையான்பட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (52). திருமணம் ஆனவர். குழந்தை இல்லை. வச்சக்காரப்பட்டி ஊராட்சியில் செயலாளராக பணிபுரிந்து வருகிறார். மது பழக்கத்திற்கு அடிமையானார். நேற்று (ஜூலை 30 ) இரவு மது போதையில் படந்தால் ரோட்டில் உள்ள சாக்கடை வாறுகாலின் மீது படுத்திருந்த போது நிலைதடுமாறி வாறுகாலில் விழுந்து பலியானார்.
சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து சாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.