நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12. 30 மணிக்கு தெலுங்கானா மாநிலம் கச்சிக்குடாவுக்கு ரெயில் புறப்படுவது வழக்கம். இந்த ரெயில் தமிழகத்தில் நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், திருவண்ணாமலை வழியாக இயக்கப்பட்டு கச்சிக்குடா செல்கிறது. ஆனால் இந்த ரெயில் நேற்று 8 மணி நேரம் தாமதமாக ஜூன் - 16 இன்று காலை 8. 30 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டது.
இணைப்பு ரெயில் வருவதற்கு தாமதம் ஆனதால் கச்சிக்குடா ரெயில் புறப்பட தாமதம் ஆனதாக ரெயில்வே அதிகாரிகள் கூறினர். ரெயில் தாமதத்தால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். கச்சிக்குடா ரெயிலானது கடந்த 3 வாரங்களாகவே தாமதமாக புறப்பட்டு செல்கிறது. எனவே இணைப்பு ரெயில் பிரச்சினையை சரி செய்ய வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.