மதுரை கோட்டத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் ரயில் சேவையில் மாற்றம் செய்துள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. கன்னியாகுமரியில் இருந்து நாளை முதல் ஜூன் -14, 21, 28 ஆகிய தேதிகளில் காலை 5. 50 மணிக்கு புறப்பட்டு மேற்குவங்க மாநிலம் ஹவுரா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (12666), மதுரை, திண்டுக்கல் செல்லாமல், சாத்தூர், விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய மாற்றுப் பாதை வழியாக ஹவுரா செல்லும். மேலும் கூடுதல் நிறுத்தமாக புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் நின்று செல்லுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதை பயணிகள் கவனத்துக்கு கொண்டு தங்களது பயணத்தை மாற்றிக் கொள்ளுமாறு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.