விருதுநகர்: பட்டாசு ஆலை வெடி விபத்து; 6 பேர் உயிரிழப்பு

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து 6 பேர் உயிரிழப்பு - பட்டாசு ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் இராஜேந்திரன் தகவல். விருதுநகர் மாவட்டம், சாத்தூரை அடுத்த பொம்மையாபுரத்தில் சிவகாசி அருகே உள்ள ஆலமரத்துப்பட்டியை சேர்ந்த பாலாஜி என்பவருக்கு சொந்தமான சாய்நாத் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலை மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை மூலம் அனுமதி பெறப்பட்ட தொழிற்சாலையாகும். 

இந்த பட்டாசு ஆலையில் 50க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. இந்த ஆலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியை துவக்கினர். அப்போது உராய்வு காரணமாக கெமிக்கல் ரூமில் திடீர் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் பணியில் இருந்த மீனாட்சி சுந்தரம், சிவகுமார், காமராஜ், வேல்முருகன், கண்ணன், நாகராஜ் ஆகிய ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பட்டாசு ஆலை உரிமத்தை தற்காலிகமாக மாவட்ட நிர்வாகம் ரத்து செய்து உத்தரவு வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி