தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் அரை மணி நேரம் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் பால் மற்றும் ஐஸ்கிரீம் பண்டங்கள், 10க்கும் மேற்பட்ட குளிர்சாதன இயந்திரங்கள் என அனைத்தும் தீயில் எரிந்து நாசமாயின. இந்த தீவிபத்தில் சுமார் ரூ. 9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின.
மேலும் இந்த தீ விபத்து மின்சிவால் ஏற்பட்டதா? அல்லது மர்ம நபர்கள் இந்த அசபாவித்தை செய்தார்களா என சாத்தூர் நகர் காவல் நிலையம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.