விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே மகனைத் தாக்கிய தந்தை கைது. சாத்தூர் விஜயராம் பேரியை சேர்ந்தவர் சுப்புராஜ், (55). இவர் மகன் கிருஷ்ணராஜா, (31). இவர், குடும்பப் பிரச்னையில் கோபமடைந்த சுப்புராஜ் மகன் கிருஷ்ணராஜாவை கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். மேலும் அப்பாயநாயக்கன்பட்டி காவல் நிலையத்தில் கிருஷ்ணராஜா புகார் தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் தந்தை சுப்புராஜை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.