3 நாட்கள் திருவிழாவில் முதல் நாளில் கரகம் எடுத்தல், இரண்டாம் நாளில் கயிறு குத்து மற்றும் அலகு குத்துதல், அக்னிசட்டி எடுத்தல், முடிகாணிக்கை உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தினர். தொடர்ந்து கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபட்டனர். மூன்றாம் நாளில் பால்குடம் எடுத்து நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து மகாகாளியம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.
தொடர்ந்து முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றதன் பின்னர் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று மாலை நேர்த்திக்கடன் போட்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிறைவாக மஞ்சள் நீராட்டு திருவிழாவுடன் திருவிழா நிறைவு பெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருவிழா கமிட்டியினர் செய்திருந்தனர்.