சாத்தூர்: தொடர் மழையால் பட்டாசு உற்பத்தி பாதிப்பு

விருதுநகர் மாவட்டம், சாத்தூர், ஏழாயிரம் பண்ணை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் சாரல் மழையால் பட்டாசு ஆலைகளின் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பட்டாசு தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தைச் சந்தித்து, பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மழையின் தொடர்ச்சியால் பட்டாசு உற்பத்தி தடைபட்டு, வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

தொடர்புடைய செய்தி