இந்த இரு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் பற்றாக்குறை, செவிலியர்கள் பற்றாக்குறை, ஆம்புலன்ஸ் வசதி இல்லை, காவலர்கள் பணியில் இல்லை, முறையான சிகிச்சை இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில், நேற்று இரவு 11 மணிக்கு மேல் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் திடீரென அரசு மகப்பேறு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் ஆட்சியர் வரும்போது அரசு மருத்துவமனை பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து மருத்துவமனையை செவிலியர்கள் திறந்தனர். பின்னர் உள்ளே சென்று ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் மருத்துவமனையில் இரவு நேரத்தில் காவலர்கள், மருத்துவர்களும் பணியில் இல்லை எனவே மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து ஆய்வு நடத்தி தலைமை மருத்துவர் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் மீது விசாரணைக்கு உத்தரவிட்டார். அதன்படி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து அரசு தலைமை மருத்துவர் முனிசாமிகேசன் மற்றும் மருத்துவர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்படும் என்றார்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்