தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, நெல்லை-மேற்குவங்க மாநிலம் புருலியா இடையிலான எக்ஸ்பிரஸ் ரெயில் (22606) அடுத்த ஆண்டு ஜனவரி 10-ந் தேதி முதல் இலகுரக பெட்டியாக மாற்றப்பட்டு இயக்கப்படும். அதே போல, புருலியாவில் இருந்து சாத்தூர் வழியாக நெல்லை வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (22605) அடுத்த ஆண்டு ஜனவரி 12-ந் தேதி முதல் இலகுரக பெட்டியாக மாற்றப்பட்டு இயக்கப்படும். இந்த ரெயில் நெல்லையில் இருந்து புதன் மற்றும் சனிக்கிழமைகளில் அதிகாலை 3 மணிக்கு புறப்படும்.