சாத்தூர்: கத்தி குத்தி செல்போன் கடை உரிமையாளர் பலி

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் நகர் மேலக்காந்தி நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (47). இவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் பாரதி நகர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிலுள்ள தென்னை மரத்தில் இளநீர் பறிப்பதற்காக மரத்தில் ஏறியபோது வழுக்கி கீழே விழுந்தார். இதில் இளநீர் வெட்டுவதற்காக இடுப்பில் சொருகி வைத்திருந்த கத்தி வயிற்றில் குத்தியதில் சம்பவ இடத்திலேயே, இவர் பரிதாபமாக உயிரழந்தார். 

உடனே தகவல் அறிந்து வந்த போலீசார் இவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து இவரது தந்தை சிவமுத்துக்குமார் அளித்த புகாரின் பேரில் சாத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி