சாத்தூர் அருகே ராமன்பட்டியில் சொத்து தகராறு காரணமாக மகன், அவரது மனைவி மற்றும் உறவினர் சேர்ந்து முதியவரை கடுமையாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணீஸ்வரன் (55) என்பவர் தனது மகன் தங்கேஸ்வரன் (எ) சைமனுக்கு ஏற்கனவே எழுதி கொடுத்த சொத்தை திரும்ப கேட்டு வழக்கு தொடர்ந்ததால், ஆத்திரமடைந்த தங்கேஸ்வரன், அவரது மனைவி சௌமியா, உறவினர் பெஞ்சமின் ஆகியோர் சேர்ந்து மணீஸ்வரனை வீடு புகுந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து மாரனேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.