இதுகுறித்து சாத்தூர் நகர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் 3 பேர் சேர்ந்து இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் சாத்தூர் நகர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்