சாத்தூர்: டாஸ்மாக் கடையில் திருட முயற்சி

வெம்பக்கோட்டை அருகே செல்லையாபுரத்தில் உள்ள அரசு டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. நேற்று முன்தினம் இரவு கடையை மூடிவிட்டு சென்ற நிலையில், மறுநாள் காலையில் பூட்டு உடைக்கப்பட்டதை அப்பகுதி மக்கள் கண்டறிந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மற்ற பூட்டுகளை உடைக்க முடியாததால் மர்ம நபர்கள் மதுபானங்கள் எதையும் திருடாமல் ஏமாற்றத்துடன் திரும்பச் சென்றதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி